Thursday, 6 August 2015


 மாடித்தோட்டம்  அமைப்போம் !!!மாடித்தோட்டம்ஏன் முக்கியம் ???

இன்றைய வேகமாக வளர்ந்து வரும் நாகரீக உலகில் நமக்கு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் ஊட்டசத்து குறைபாடு.  இதற்கு காரணம் 
 அன்றாடம் நாம் சாப்பிடும் இரசாயணம் கலந்த நஞ்சு நிறைந்த காய்கறிகள் பழங்கள் தான் .

ஊட்டசத்து குறைபாடுகளால்  எற்படும் பாதிப்புகள் பற்றி பார்ப்போம்: 

 உலக சுகாதார அமைப்பின் ஆய்வு படி உலகில் 250 மில்லியன் குழந்தைகள்  விட்டமின் A குறைபாட்டினால் பார்வை இழக்கின்றனர் 
இதுபோல் இன்னும் பல உள்ளன.

கோடிகோடியாக பணம் மட்டும் .நாம் நம் அடுத்த தலைமுறைக்கு சேர்த்துவைத்தால் போதுமா?

என்னதான் பணம் இருந்தாலும் பணம் மட்டுமே அவர்களுக்கு ஊட்டசத்தை கொடுத்துவிடுமா ?

எதிர்கால தலைமுறை அழியும் அபாயம் பேராபத்தும் நம்மை நெருங்கிவிட்டது ... 

எப்படி இவற்றை குறைக்க முடியும் 
                                                          மாடித்தோட்டம் அமைப்பதன் மூலமாக மட்டுமே 
நாம் நம் எதிர்கால தலைமுறையையும் ஊட்டசத்து குறைபாடு என்னும் பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும்...

நமக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை  நம் வீட்டு மாடிகளில் வளர்க்கலாம்...

மாடித்தோட்டதின் வகைகள்  அமைக்கும் முறைகள் போன்றவற்றை 
அடுத்த பதிவில் பார்ப்போம்!!.



Tuesday, 4 August 2015


உழவுக்கு உயிரூட்டுவோம்!!


இந்தப்பகுதி  விவசாயத்தின் மீதும்  இயற்கை அன்னையின் மீதும்  ஆழ்ந்த  பற்றின்பால் துவங்குகிறேன் ..

 இயற்கை விவசாயம் பற்றிய செய்திகள் இயற்கை விவசாயம்  செய்யும் முறைகள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள் பற்றி அனைவரும் அறியவே இந்த வலைத்தளம் ..


 உலகப் பொதுமறையாம் திருக்குறள் உழவைப் பற்றி கூறியது.
  
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேம் என்  பார்க்கும் நிலை. குறள் -1036

உழவருடைய கை தொழில் செய்யாமல் மடங்கி இருக்குமானால் விரும்புகின்ற எந்த பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை -மு.வ உரை